நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: சாலையோரத்தில் நிறுத்தி விட்டு சென்ற பைக்கை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
அரியாங்குப்பம் ஜெயபால் நகரை சேர்ந்தவர் ரவி, 60; இவர் சித்த மருத்துவம் பார்த்து வருகிறார். இவரது நண்பர் ஒருவரின் பைக்கை கடந்த 29ம் தேதி எடுத்து சென்று, முதலியார்பேட்டை நுாறடி சாலை தனியார் மதுபார் அருகே சாலையோரத்தில் நிறுத்தி விட்டு, மற்றொரு நண்பரின் பைக்கில் சென்றார்.
பின்னர் வந்து பார்க்கும் போது அங்கு நிறுத்திருந்த பைக் காணாமல் போயிருந் தது. பல இடங்களில் தேடி யும் பைக் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து பைக் திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.