நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ஓட்டல் எதிரில் நிறுத்திய பைக்கை காணவில்லை என வாலிபர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
முருங்கப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மிதுனன் 22, இவர் கடந்த மே மாதம் 22ம் தேதி தனது பைக்கை, காந்தி வீதி-ராஜாசிங் வீதியில் உள்ள தனியார் ஓட்டல் எதிரில் நிறுத்தி விட்டு ஓட்டலுக்கு சென்றார்.
பின் ஓட்டலில் இருந்து வந்து பார்த்தபோது அவரது பைக் காணமால் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து மிதுனன் ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.