/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ., கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டம்
/
பா.ஜ., கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டம்
ADDED : ஏப் 08, 2024 05:27 AM

திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு தொகுதி பா.ஜ., பட்டியலணிசார்பில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
தொகுதி தலைவர் ராஜாமணி தலைமை தாங்கினார்.தொகுதி பொதுச் செயலாளர் காளிதாஸ் முன்னிலை வகித்தார்.
பட்டியலணிமாநில தலைவர் விஸ்வமோகன், பொதுச் செயலாளர் நாகரத்தினம், மாநில துணைத் தலைவர் வின்னரசன், மாவட்ட தலைவர் சேகர், தொகுதி செயலாளர் வினோத் ஆகியோர் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி பேசினர்.
கூட்டத்தில் பா.ஜ., மாநில சிறப்பு அழைப்பாளர் வீரராகவன், மண்டல பொறுப்பாளர் கண்ணன்,மாநில நிர்வாகிகள் தமிழ்மணி, கலியபெருமாள், செல்வகுமார் ஆகியோர் பங்கேற்று பா.ஜ.,வேட்பாளர் நமச்சிவாயத்தை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.
பா.ஜ., பட்டியலணி மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

