/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்று தருவேன் பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் முதல் உறுதி
/
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்று தருவேன் பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் முதல் உறுதி
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்று தருவேன் பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் முதல் உறுதி
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்று தருவேன் பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் முதல் உறுதி
ADDED : ஏப் 03, 2024 03:15 AM

புதுச்சேரி : எதற்கும் பயனில்லாத காங்., வேட்பாளரை தேர்வு செய்து அனுப்பினால் புதுச்சேரிக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என, பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
அவர், கூறியதாவது:
காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் 5 ஆண்டு என்ன செய்தார். எதற்கும் பயனில்லாத காங்., வேட்பாளரை தேர்வு செய்து அனுப்பினால் புதுச்சேரிக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. மீண்டும் அந்த தவறை செய்யாமல், எனக்கு வாய்ப்பு தாருங்கள்.
கடந்த காலங்களில் காங்., தான் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தது. அவர்களின் ஆட்சியில் மாநில அந்தஸ்து கேட்டும் பெற முடியவில்லையே. மாநில அந்தஸ்து வாக்குறுதியை தேர்தலில் எனது முதல் வாக்குறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்.13 முறை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாராயணசாமி, வைத்திலிங்கம் முதல்வராக இருந்தபோதும் மாநில அந்தஸ்து தீர்மானம் போடப்பட்டுள்ளது.
அவர்கள் சரியான முறையில் கொண்டு செல்லவில்லை. நான், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற உரிய முயற்சி எடுப்பேன்.நாராயணசாமி எதை கூறினாலும், ஆதாரத்தோடு சொல்ல வேண்டும். வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என பேசக்கூடாது. என்னிடம் 1,000 கோடி இருப்பதாக பொய்யான கருத்துக்களை கூறுகிறார்.
எந்த ஆதாரம் இருந்தாலும் அதை நீதிமன்றத்தில் சந்திக்க தயார்.
அடுத்தவர்களை சீவி விடுவதில் வைத்திலிங்கம் கில்லாடி. புதுச்சேரியில் பா.ஜ., வெற்றி பெறுவது உறுதி.கடந்த தேர்தலில் காங்.,கிற்கு தேர்தல் பணியாற்றிய யாரும் தற்போது அவருடன் இல்லை. நாங்கள் வெளியேறியது காங்கிரசுக்கு பலவீனம் தான். ஏன் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறவில்லை. 15 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தனர், தற்போது 2 பேர் தான் உள்ளனர். என்னை பொறுத்தவரை எதிர்கட்சி வேட்பாளர் டிபாசிட் இழப்பார் என்பது என் நம்பிக்கை. இவ்வாறு அவர் கூறினார். சந்திப்பின்போது பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி உடனிருந்தார்.

