/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேர்தல் விதிகளை மீறும் பா.ஜ.,: இ.கம்யூ., குற்றச்சாட்டு
/
தேர்தல் விதிகளை மீறும் பா.ஜ.,: இ.கம்யூ., குற்றச்சாட்டு
தேர்தல் விதிகளை மீறும் பா.ஜ.,: இ.கம்யூ., குற்றச்சாட்டு
தேர்தல் விதிகளை மீறும் பா.ஜ.,: இ.கம்யூ., குற்றச்சாட்டு
ADDED : மார் 23, 2024 06:13 AM
புதுச்சேரி : புதுச்சேரியில், தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி பா.ஜ., செயல்பட்டு வருவதாக, இ.கம்யூ., மாநில செயலாளர் சலீம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
புதுச்சேரி மாநிலத்தில் நடைமுறையில் உள்ள பல்வேறு திட்டங்களால், பொது மக்கள் பயன் பெற்று வருகின்றனர். மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில், கருவுற்ற தாய்மார்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் குழந்தைகள் பெற்றெடுக்கும் போது மாநில அரசு சார்பில் உதவித்தொகை பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றது.
அதேபோல, தேசிய நகர்புற வாழ்தார மையம் மூலம் சாலையோரத்தில் வியாபாரம் செய்யும் நபர்களை அடையாளம் கண்டு அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டங்கள் மூலம் பயனடைந்து வரும், பயனாளிகளிடம், பா.ஜ.,வின் தகவல் தொழில் நுட்ப பிரிவு நபர், தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அந்த திட்டத்தில், பண உதவியை பிரதமர் மோடி வழங்கினார் எனவும், அதனால் வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ.,விற்கு வாக்களிக்க வேண்டும் எனவும் பேசி வருகின்றனர்.
தேர்தல் தேதி அறிவித்த பின்னர், இன்று வரையில், இப்படி வாக்கு சேகரிப்பது, தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது.
இது குறித்து உரிய ஆதாரங்களுடன், புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரிக்கு மின்னஞ்சல் மூலம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேர்தல் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

