/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மிசா சட்டத்தை நினைவு படுத்தி கருப்பு தின கருத்தரங்கம்
/
மிசா சட்டத்தை நினைவு படுத்தி கருப்பு தின கருத்தரங்கம்
மிசா சட்டத்தை நினைவு படுத்தி கருப்பு தின கருத்தரங்கம்
மிசா சட்டத்தை நினைவு படுத்தி கருப்பு தின கருத்தரங்கம்
ADDED : ஜூன் 26, 2024 02:37 AM

புதுச்சேரி : புதுச்சேரியில், மிசா சட்டத்தை நினைவு படுத்தி நடந்த, கருப்பு தின கருத்தரங்கில், பா.ஜ., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி, பா.ஜ., தலைமை அலுவலகத்தில், 'மிசா' சட்டத்தை நினைவு படுத்தும் வகையில், நேற்று கருப்பு தின கருத்தரங்கம் நடந்தது. பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், தமிழக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் பங்கேற்று பேசியதாவது;
'எமர்ஜென்சி காலகட்டத்தில், பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியின் தலைவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர்.
ஆர்.எஸ்.எஸ்., ஜன சங்கத்தின் தொண்டர்கள், 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர், இரண்டரை ஆண்டுகள் கடும் சிறைவாசம் அனுபவித்தனர். லட்சக்கணக்கான, ஆர்.எஸ்.எஸ்., ஜன சங்கத்தினர் தலைமறைவு இயக்கம் மற்றும் போராட்டம் நடத்தி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதன் மூலம், முன்னாள் பிரதமர் இந்திராவிற்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது' என்றார்.
மேலும், அவர் காங்., ஆட்சியில், அரசியல் அமைப்பு சட்டத்தை, 75 முறை திருத்தியதையும், 356 பிரிவை பயன்படுத்தி, 90 முறை மக்களால், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை கலைத்தது; எமர்ஜென்சி சமயத்தில், 7 லட்சத்திற்கும், குடிசைவாசிகளை டில்லியில் இருந்து வெளியேற்றியது; 85 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண்களை வலுக்கட்டாயமாக குடும்ப கட்டுப்பாடு செய்தது போன்ற சம்பவங்களை விளக்கினார்.
இதில், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், அசோக்பாபு, சிவசங்கரன், பொதுச்செயலாளர்கள் மோகன்குமார், மவுலிதேவன் உட்பட பலர் பங்கேற்றனர்.