/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 27, 2025 07:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி; பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் நல சங்கம் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., தலைமை அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அசோகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். சங்க நிர்வாகிகள், ஓய்வூதியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு தொலைதொடர்பு துறை ஊழியர்களின் கூட்டுறவு சங்கம், ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும், வழங்காமல் சங்க நிதியை ஊழல் செய்த நிர்வாகிகளை உடனே கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.