நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வம்பாகீரப்பாளையம் அங்காளபரமேஸ்வரி கோவிலில் மயானக்கொள்ளை விழா நேற்று நடந்தது.
புதுச்சேரி வம்பாகீரப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 129ம் ஆண்டு மயான கொள்ளை விழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் ஆராதனைகளும், இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது.
முக்கிய நிகழ்ச்சியான மயான கொள்ளை விழா நேற்று மாலை அங்குள்ள சன்னியாசி தோப்பு சுடுகாட்டில் நடந்தது. விழாவில், உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதிகளை சேர்ந்த ஏராளமான, பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இன்று தெப்பல் உற்சவமும், நாளை மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.