/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அதிகமாக குடித்த பஸ் டிரைவர் சாவு
/
அதிகமாக குடித்த பஸ் டிரைவர் சாவு
ADDED : மே 03, 2026 09:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: அதிகமாக மது குடித்த பஸ் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
வில்லியனுார் அடுத்த பிள்ளையார்குப்பம் துாக்குப்பாலம் சாலையைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன், 57: தனியார் பஸ் டிரைவர். குடிப்பழக்கம் உள்ள இவர், அவ்வப்போது குடித்து வீட்டு வீட்டிற்கு வருவார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை முத்துக்கிருஷ்ணன் மனைவி உமாமகேஸ்வரி மகள் வீட்டிற்கு சென்றிருந்தார். மாலை வீட்டிற்கு வந்தபோது முத்துக்கிருஷ்ணன் வீட்டில் இறந்து கிடந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

