ADDED : ஆக 20, 2024 05:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ராஜிவ் சிக்னல் தடுப்பு கட்டையில் கார் மோதி விபத்திற்குள்ளானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நேற்று இரவு 11:00 மணி அளவில், நுாறடி சாலையில் வேகமாக வந்த கார் ஒன்று, கோரிமேடு சாலைக்கு திரும்ப முயன்றது. அப்போது எதிர்பாராத விதமாக கார், சாலை தடுப்புக் கட்டையில் மோதியது. அதில், காரின் முன்பகுதி சேதமடைந்தது. விபத்து குறித்து வடக்கு பகுதி போக்குவரத்து போலீசார், விசாரித்து வருகின்றனர்.

