/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் டில்லியில் மத்திய உயரதிகாரிகளுடன் ஆய்வு
/
பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் டில்லியில் மத்திய உயரதிகாரிகளுடன் ஆய்வு
பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் டில்லியில் மத்திய உயரதிகாரிகளுடன் ஆய்வு
பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் டில்லியில் மத்திய உயரதிகாரிகளுடன் ஆய்வு
ADDED : ஜூலை 06, 2024 04:35 AM
புதுச்சேரி: புதுச்சேரி மேம்பால பணி மற்றும் கடலுார் சாலை விரிவாக்கம் குறித்து, டில்லியில் மத்திய உயரதிகாரிகளுடன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் பல்வேறு பணிகள் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன், டில்லியில் முகாமிட்டிருந்தார்.
கடந்த, 1,ம் தேதி காலை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தில், கூடுதல் இயக்குநர் ஜெனரல் சின்ஹா, கண்காணிப்பு பொறியாளர் ராஜேஷ்குமார் ஆகியோரை சந்தித்தார்.
அப்போது அவர்களிடம், ராஜிவ் சதுக்கம் முதல் இந்திரா சதுக்கம் வரையிலான மேம்பால பணி மற்றும் கடலுார் சாலை விரிவாக்க பணிக்கு நிதி பெறுவது தொடர்பான, விரிவான புதிய அறிக்கையின் அமைச்சகத்திற்கு சமர்ப்பிக்க அவர்கள் அறிவுறுத்தினர்.
இதையடுத்து மத்திய தேர்வாணையத்தின் கூடுதல் செயலர் மற்றும் இணை செயலர் ஆகியோரை சந்தித்து, பொறியாளர் பணி நியமன விதிகள் மற்றும் பதவி உயர்வில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து பேசினர். அவர்களின் வழிகாட்டுதல் படி, திட்டங்களை சமர்ப்பிக்க, கூடுதல் செயலர் அறிவுறுத்தினார்.
மேலும் மத்திய நீர்வள அமைப்பு அமைச்சகத்தின் செயலரை சந்தித்து, புதுச்சேரியில் ஜே.ஜே.எம்., திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கான, நிலுவைத்தொகையை விடுவிக்க, கேட்டுக்கொண்டார்.
கடந்த, 2ம் தேதி, மத்திய நீர் வள அமைச்சகத்தில் நடந்த பெண்ணையாறு நீர்ப்பங்கீடு குறித்த திட்டத்தில், கலந்து கொண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கான, உடன்படிக்கையின் படி, புதுச்சேரிக்கு கிடைக்க வேண்டிய, நீரின் அளவு குறித்து புள்ளி விவரங்களுடன் விளக்கி பேசினார்.
ஆண்டுக்கு, 9 மாதங்கள் நீர் திறந்து விட வேண்டும். ஆனால் மழைக்காலங்களில் உபரி நீர் திறந்து விடப்படுவதையும், புதுச்சேரியின் நிலத்தடி நீரின் தன்மை குடிக்க உகந்ததாக இல்லை எனவும் விவசாயத்திற்கும் தண்ணீர் தேவைப்படுவதையும் விளக்கினார்.
நிலத்தடி நீரை பயன்படுத்த முடியாத சூழலில், தென்பெண்ணை ஆற்று நீர் கிடைத்தால் மட்டுமே, குடிநீர் தேவையையும், விவசாய தேவையையும், பூர்த்தி செய்ய முடியும் என்பதையும் அழுத்தமாக தெரிவித்தார்.
குடிநீருக்கும், விவசாயத்திற்கும் சேர்த்து, 7.9 டி.எம்.சி., தண்ணீர் தேவை என்பதை ஆணையத்திடம் முறையிட்டார். ஒழுங்காற்று ஆணையத்தின் தலைவரும், தமிழக அரசை பரிசீலீக்க பரிந்தரைத்தார். இந்த பயணத்தின் போது செயற்பொறியாளர்கள் பாலசுப்ரமணியன், சுந்தர மூர்த்தி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.