sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்துக்கு வாய்ப்பு முதல்வர் ரங்கசாமி நம்பிக்கை

/

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்துக்கு வாய்ப்பு முதல்வர் ரங்கசாமி நம்பிக்கை

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்துக்கு வாய்ப்பு முதல்வர் ரங்கசாமி நம்பிக்கை

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்துக்கு வாய்ப்பு முதல்வர் ரங்கசாமி நம்பிக்கை


ADDED : மார் 14, 2025 04:29 AM

Google News

ADDED : மார் 14, 2025 04:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில், வெள்ள நீர் தேங்கி பாதிக்கப்பட்டவர்களுக்க, மத்திய அரசிடம் நிதியுதவி பெற்று நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.,க்கள் பேசும் போது பெஞ்சல் புயலால் பாதித்த வீடுகள், கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்காதது குறித்து கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்து முதலமைச்சர் ரங்கசாமி நேற்று பேசியதாவது:

நுாறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் சில குளறுபடிகள் ஏற்பட்டதால், பணி நிறுத்தப்பட்டது. தற்போது நிதி ஒதுக்கி புதிய அதிகாரிகளை நியமித்துள்ளோம். இந்த நிதியாண்டில் முழுமையாக 100 நாள் வேலை திட்டம் அமல்படுத்தப்படும். கவர்னர், தலைமை செயலாளர், செயலர்கள் என அனைவரும் ஒட்டுமொத்தமாக இணைந்து செயல்படும்போது தான் நிர்வாகத்தில் வளர்ச்சி கிடைக்கும். மாறுபட்ட கருத்து இருந்தால், வளர்ச்சிக்கு அது தடையாக அமையும்.

கொல்லப்புற நியமனம் கூடாது என கோர்ட்டு தடை விதித்துள்ளது. இதனால் 15 ஆண்டாக பணிபுரிந்தவர்களை நிரந்தரம் செய்ய முடியாத நிலை உள்ளது. இந்த கோர்ட் உத்தரவு சங்கடத்தையும் ஏற்படுத்துகிறது.

இதனால் தான் போராட்டங்கள் பெருகியுள்ளது. ஆனாலும், இதையெல்லாம் தாண்டி பணி நிரந்தரம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

விடுபட்ட மாணவர்களுக்கு மே, ஜூன் மாதம் லேப்டாப் வழங்கப்படும். குடும்ப தலைவிகளுக்கு ரூ.2 ஆயிரத்து 500 உயர்த்தி அறிவித்துள்ளீர்கள். அதை கொடுக்க முடியுமா? என கேள்வி எழுப்புகின்றனர். நிச்சயமாக அறிவித்தபடி இந்த தொகை வழங்கப்படும். தற்போது இந்த நிதியை 56 ஆயிரம் பெண்கள் பெற்று வருகின்றனர். மழையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ரூ.5 ஆயிரம் வழங்கினோம்.

வீடு இடிந்து, சேதமடைந்தவர்களுக்கு கணக்கெடுப்பு நடத்தியுள்ளோம். அவர்களுக்கும் கணக்கெடுப்புக்கு பின் மத்திய அரசு உதவியுடன் நிதி வழங்குவோம்.

உப்பனாறு வாய்க்காலில் தண்ணீர் தேங்கியதால் வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் வீட்டு உபயோக பொருட்கள் சேதமடைந்தது. பலர் ரூ.5 லட்சம் வரை செலவு செய்துள்ளனர். 5 தொகுதிகளில் இதுபோன்ற நிலை உள்ளது. இதை எப்படி கணக்கெடுத்து நிவாரணம் வழங்குவது என அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறோம்.

இதுவரை நிவாரணத்துக்காக ரூ.207 கோடி செலவு செய்துள்ளோம். இருப்பினும் வீடு இழந்தவர்கள், வெள்ளம் தேங்கி பாதிக்கப்பட்டவர்கள், மரணமடைந்தவர்களுக்கும் மத்திய அரசின் நிதி பெற்று நிவாரணம் வழங்கப்படும். டில்லியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

இதுதொடர்பாகவும் கவர்னரை சந்தித்து தெரிவித்துள்ளேன். அரசின் கோப்புகளுக்கு எதிர்மறை எண்ணங்கள் இல்லாமல், பாசிட்டிவாக முடிவெடுக்க வேண்டும் என கவர்னர், செயலர்களிடம் கூறியுள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us