/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு :புதுச்சேரியில் 1,521 பேர் எழுதினர்
/
சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு :புதுச்சேரியில் 1,521 பேர் எழுதினர்
சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு :புதுச்சேரியில் 1,521 பேர் எழுதினர்
சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு :புதுச்சேரியில் 1,521 பேர் எழுதினர்
ADDED : ஜூன் 17, 2024 06:50 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று ஏழு மையங்களில் நடந்த சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வினை காலையில் 1,521 பேர், மாலையில் 1512 பேர் எழுதினர்.
மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு நேற்று நாடு முழுதும் காலை 9:30 முதல் 11:30 மணி வரை, மதியம் 2:30 முதல் மாலை 4:30 மணி வரை நடந்தது.
புதுச்சேரியில் லாஸ்பேட்டை வள்ளலார் அரசு பெண்கள் மேநிலைப்பள்ளி, அரசு மகளிர் பொறியியல் கல்லுாரி, செல்லப்பெருமாள் பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி, உப்பளம் இமாகுலேட் ஹார்ட் ஆப் மேரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, முத்தியால்பேட்டை பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லுாரி உள்பட ஏழு இடங்களில் தேர்வு நடந்தது.
தேர்வு எழுத வந்த தேர்வர்கள் பலத்த சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர். மின்னணு பொருட்கள் தேர்வறையில் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. மாற்றுத் திறனாளிகள் விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் தரைத்தளத்தில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மொத்தம் 2,578 பேர் புதுச்சேரியில் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். காலையில் 1,521 பேரும் (59 சதவீதம்), மாலையில் 1512 பேரும் (58.65 சதவீதம்)தேர்வு எழுதினர். காலையில் 1,057 பேரும், மாலையில் 1066 பேரும் ஆப்சென்ட்.
மத்திய தேர்வாணைய தேர்வினை தேர்வர்கள் சிரமமின்றி எழுத விரிவான ஏற்பாடுகளை நிர்வாக சீர்திருத்த துறை செய்திருந்தது. தேர்வர்களின் வசதிக்காக புது பஸ் நிலையத்தில் இருந்து காலை 7:00 மணி முதல் 8:45 மணி வரையும் அனைத்து தேர்வு மையங்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதேபோல் தேர்வு முடிந்த பிறகு பஸ் நிலையம் திரும்பி செல்ல மாலை 4:30 மணி முதல் பஸ்கள் இயக்கப்பட்டன. சிவில் சர்வீசஸ் தேர்வினையொட்டி தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர்வு மையங்களை சார்பு செயலர் ஜெய்சங்கர் ஆய்வு செய்தார்.