ADDED : ஜூலை 27, 2026 07:00 PM
புதுச்சேரி: சுத்துக்கேணி அரசு பள்ளி மற்றும் கிராம நிர்வாக அலுவலகத்தில், கலெக்டர் குலோத்துங்கன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சுத்துக்கேணி அரசு உயர்நிலை பள்ளிக்கு நேற்று காலை கலெக்டர் குலோத்துங்கன் சென்று, மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறைகளை பார்வையிட்ட அவர், தினமும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கிட வேண்டும் என்றார்.
மேலும், மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து மாணவர்களுடன் கேட்டறிந்து, கலந்துரையாடினார். அப்போது, அவர்‘கல்வி தான் முக்கியம். கல்வியுடன் சேர்ந்து விளையாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் படிப்பிலும், விளையாட்டிலும், ஒழுக்கத்திலும் ஆசிரியர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானது. மாதம் ஒரு முறை பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நிகழ்வு நடத்திட வேண்டும்.
தொடர்ந்து, அவர் சுத்திக்கேணி கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்கள். அப்போது, அவர் ஊழியர்களிடம், குறித்த நேரத்தில் பணிக்கு வர வேண்டும். பொது மக்கள் கேட்கும் சான்றிதழ்களை உடனுக்குடன் வழங்க வேண்டும் என அறிவுறுத்தி புறப்பட்டு சென்றார்.
