/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முத்து மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம் துவக்கம்
/
முத்து மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம் துவக்கம்
ADDED : மே 21, 2024 05:04 AM
திருக்கனுார்: வம்புப்பட்டு முத்துமாரியம்மன் கோவிலில், செடல் உற்சவம் ஐய்யனாரப்பனுக்கு ஊரணி பொங்கலுடன் நேற்று துவங்கியது.
திருக்கனுார் அடுத்த வம்புப்பட்டு கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவில் செடல் உற்சவம் நேற்று ஐயப்பனாரப்பன் கோவிலில் ஊரணி பொங்கலுடன் துவங்கியது.
இதையொட்டி, இன்று (21ம் தேதி) காலை 7:00 மணிக்கு முத்து மாரியம்மன் கரகம் வீதியுலா, மதியம் 1:00 மணிக்கு சாகை வார்த்தல் நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு கோவில் வளாகத்தில் சிவன்-பார்வதி சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
தொடர்ந்து, வரும் 22ம் தேதி மாலை 4:00 மணிக்கு ஊரணி பொங்கல் நிகழ்ச்சியும், இரவு 7:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
முக்கிய நிகழ்வாக, 23ம் தேதி காலை 8:00 மணிக்கு பால் குடம் ஊர்வலம் மற்றும் அபிஷேகமும், 24ம் தேதி செடல் உற்சவமும் நடக்கிறது. ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

