/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துாய்மை பணியில் சுணக்கம் காட்டினால் கடும் நடவடிக்கை ஆணையர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
/
துாய்மை பணியில் சுணக்கம் காட்டினால் கடும் நடவடிக்கை ஆணையர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
துாய்மை பணியில் சுணக்கம் காட்டினால் கடும் நடவடிக்கை ஆணையர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
துாய்மை பணியில் சுணக்கம் காட்டினால் கடும் நடவடிக்கை ஆணையர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
ADDED : மே 19, 2024 03:37 AM

புதுச்சேரி, : துாய்மை பணியில் சுணக்கம் காட்டும் அதிகாரிகள், ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நகரம், கிராமப்புறப் பகுதிகளில் குப்பைகள் சரிவர அள்ளப்படாமல் இருப்பதை கண்ட கவர்னர் ராதாகிருஷ்ணன் கடும் அதிருப்தி தெரிவித்தார். அதற்கான கோப்பையும் நிறுத்தி வைத்தார்.
அதைத் தொடர்ந்து குப்பைகளை அள்ளுவது குறித்து உள்ளாட்சித் துறை இயக்குனர் சக்திவேல் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. துணை இயக்குனர் சவுந்தரராஜன், புதுச்சேரி ஆணையர் கந்தசாமி, உழவர்கரை ஆணையர் சுரேஷ்ராஜ், நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள், தனியார் குப்பை அள்ளும் நிறுவன பிரநிதிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பொதுமக்களுக்கு அதிருப்தி ஏற்படாத வகையில் குப்பைகளை அகற்றும் பணியை தனியார் நிறுவனங்கள் மேற்கொள்கின்றனரா என்பதை உறுதி செய்ய வேண்டும். துாய்மை பணியில் சுணக்கம் காட்டும் அதிகாரிகள், ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
குப்பை சரிவர வாராமல் தேங்கி இருப்பதாக கவனத்திற்கு வரும் பட்சத்தில் குப்பைகள் அள்ளும் தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.
புதுச்சேரியின் துாய்மை நமக்கு பெருமை என்ற நோக்கத்தோடு, பள்ளி, கல்லுாரிகள், குடியிருப்போர் நலச் சங்கங்கள், வியாபாரிகள், பொதுமக்களை ஒன்று சேர்த்து தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது. இவற்றை பொதுப்பணித் துறையுடன் இணைந்து சிறப்பு துாய்மை படைகள் அமைப்பது.
சுகாதாரத்தை பேணி காக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் பொதுமக்களுக்கும் உண்டு. எனவே குப்பைகளை தெருவில் வீசாமல் இருக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்.
சாலை, உணவகங்கள், வணிக நிறுவனங்களில் அசுத்தம் ஏற்படுத்தும் வகையில், குப்பைகள் கொட்டப் பட்டு, துாய்மையான சூழ்நிலையை பராமரிக்கப்படா மல் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள், வணிக நிறுவனங்கள் மீது நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து சட்டங்களின்படி அபராதம் விதிக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

