நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொசு தொல்லை
எல்லைபிள்ளைச்சாவடி மோகன் நகர், 3வது குறுக்கு தெருவில், வாய்க்கால், அடைத்து, கொசு தொல்லை அதிகரித்து வருகிறது.
விஜயவேணி, எல்லைபிள்ளைச்சாவடி.
நிழற் குடை தேவை
மரப்பாலத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாமல் இருப்பதால் பொதுமக்கள் வெயிலில் நின்று அவதிப்பட்டு வருகின்றனர்.
ராணி, மரப்பாலம்.
வாகனங்களை நிறுத்துவதால் இடையூறு
அரியாங்குப்பத்தில், நான்கு முனை சந்திப்பில், இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
கார்த்தி, அரியாங்குப்பம்.
சிக்னலில் கண்காணிப்பு தேவை
தவளக்குப்பத்தில், சிக்னலை மதிக்காமல் வாகனங்கள் தாறுமாறாக சென்று வருகிறது.
மகேஷ், தவளக்குப்பம்.

