
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குண்டும் குழியுமான சாலை
முதலியார்பேட்டை வள்ளலார் வீதியில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.
ரமேஷ், முதலியார்பேட்டை.
தனியார் பஸ்களால் பாதிப்பு
இந்திரா சிக்னலில் தனியார் பஸ்கள்நடுரோட்டில் நிறுத்தி பயணிகளை இறக்குவதால், பின்னால் வரும் வாகனங்கள் கடந்து செல்லமுடிவதில்லை.
பார்த்திபன், புதுச்சேரி.
கனரக வாகனங்களால் விபத்து
புதுச்சேரி நுாறடி சாலையில் என்.டி. மகாலில் இருந்து கல்வித்துறை வளாகம் வரை சாலையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்படும் கனரகவாகனங்களால் விபத்து ஏற்படுகிறது.
விமல், கோரிமேடு.
சிக்னலில் தாறுமாறாக செல்லும் வாகனம்
வில்லியனுார் பைபாஸ் சாலை சிக்னலில்போக்குவரத்து போலீசார் பணியில் இல்லாததால்,வாகனங்கள் தாறுமாறாக செல்கிறது.
மணி, வில்லியனுார்.

