
சாலையில் பள்ளம்
வில்லியனுார், சங்கராபரணி ஆற்று பாலத்தின் மேற்கு கரை பக்கத்தில் சாலையில் மெகா சைஸ் பள்ளம் உருவாகி உள்ளது.
பாலசுப்ரமணியன், புதுச்சேரி.
குண்டும் குழியுமான சாலை
வேல்ராம்பட்டு ஏரிக்கரை சாலை குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
முத்துக்குமரன், முதலியார்பேட்டை.
வேகத்தடை தேவை
விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலை அரியூர் மேம்பாலத்தின் கீழ் செல்லும் சர்வீஸ் சாலையில், வேகத்தடை அமைக்க வேண்டும்.
செல்வகுமார், அரியூர்.
சாலை ஆக்கிரமிப்பு
மறைமலையடிகள் சாலையை ஆக்கிரமித்து நடத்தப்படும் தள்ளுவண்டி கடைகளால் வாகனங்கள் எளிதாக கடந்து செல்ல முடியவதில்லை.
தியாகு, புதுச்சேரி.
சிலாப் அமைக்கப்படுமா?
நுாறடிச்சாலை ராஜிவ் சிக்னல் அக்கார்டு ஓட்டல் ப்ரி லெப்ட் பகுதியில் சாலையோர வாய்க்கால் மீது சிலாப் சரிவர அமைக்காமல் உள்ளது.
தருண், புதுச்சேரி.
கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு
புதுச்சேரி வி.வி.பி., நகரில் கழிவுநீர் செல்லும் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், துர்நாற்றம் வீசி வருகிறது.
சகுந்தலா, வி.வி.பி., நகர்.
துர்நாற்றம் வீசுகிறது
ரெயின்போ நகரில், பாதாள சாக்கடை செல்லும் வாய்க்காலில், இருந்து துர்நாற்றம் வீசி வருகிறது.
மோகன், புதுச்சேரி.
கடைகள் ஆக்கிரமிப்பு
காந்தி வீதி - சவரிராயலு சந்திப்பில் கடைகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.
ராஜேந்திரன், புதுச்சேரி.
நாய்கள் தொல்லை
முத்தியால்பேட்டை, சுந்தர விநாயகர் பட்டு தெருவில், நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
ஜெயா, முத்தியால்பேட்டை.
கொம்பாக்கம் சோனியாகாந்தி நகரில் நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
காந்தி, கொம்பாக்கம்.
கூடுதல் போலீசார் தேவை
இ.சி.ஆர்., சாலை பாக்கமுடையான்பட்டு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், கூடுதலாக போலீசார் நிறுத்த வேண்டும்.
தீனதயாளன், புதுச்சேரி.
வாகன ஓட்டிகள் அவதி
வில்லியனுார் ஆரியப்பாளையம் பழைய மேம்பாலத்தில் அதிகளவில் பள்ளங்கள் இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ரஜினிமுருகன், வில்லியனுார்.
ைஹமாஸ் எரியுமா?
அபிேஷகப்பாக்கம் சாலை தெப்பக்குளம் அருகே ைஹமாஸ் விளக்கு எரியாமல் இருப்பதால், இரவில் இருண்டு கிடக்கிறது.
கதிர், தவளக்குப்பம்.

