ADDED : ஜூன் 03, 2024 05:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : நகராட்சியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.
புதுச்சேரி நகராட்சியில் சுகாதார ஆய்வாளர் ரவி, சுகாதார ஊழியர்கள் ராமலிங்கம், சூசைமேரி, சாந்தி, குப்பன் ஆகியோர் பணியாற்றி, ஓய்வு பெற்றனர். அவர்களுக்கு நேற்று கம்பன் கலையரங்கில் பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.
நகராட்சி ஆணையர் கந்தசாமி, அவர்களை பாராட்டி கவுரவித்து நினைவு பரிசு வழங்கினார்.
இவ்விழாவில், செயற்பொறியாளர் சிவபாலன், மருத்துவ அதிகாரி ஆர்த்தி, உதவி பொறியாளர் நமச்சிவாயம் உட்பட பலர் பங்கேற்றனர்.