/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தவளக்குப்பத்தில் தொடர் விபத்தால் பரபரப்பு
/
தவளக்குப்பத்தில் தொடர் விபத்தால் பரபரப்பு
ADDED : செப் 03, 2024 06:33 AM

பாகூர் : தவளக்குப்பத்தில் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பஸ், பள்ளி வாகனம், கார், மற்றும் ஸ்கூட்டர் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் இருந்து மயிலாடுதுறை நோக்கி நேற்று காலை சுமார் 8 மணியளவில் தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. தவளக்குப்பம் 4 முனை சந்திப்பு அருகே சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், எதிரே சென்ற தனியார் பள்ளி பஸ், கார், ஸ்கூட்டர் மீது அடுத்தடுத்து மோதி நின்றது. இந்த விபத்தில், யாரும் காயமின்றி உயர் தப்பினர். பள்ளி பஸ் மீது தனியார் பஸ் மோதிய விபத்துக்குள்ளான சம்பவம் அறிந்த பெற்றோர்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சரி செய்தனர்.
விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.