/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'காங்., - பா.ஜ.,வுக்கு பணம் வந்துவிட்டது'
/
'காங்., - பா.ஜ.,வுக்கு பணம் வந்துவிட்டது'
ADDED : ஏப் 14, 2024 05:27 AM

அ.தி.மு.க., அன்பழகன் பேச்சு
புதுச்சேரி: புதுச்சேரி லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் உப்பளம் தொகுதியில் பேசியதாவது;
சிறுபான்மை மக்களுக்கு பா.ஜ., அரசு காழ்புணர்ச்சியால் எந்தவித நன்மையும் செய்யவில்லை. 8 ஆண்டுகளாக வக்பு போர்டு இல்லை. கிறிஸ்துவ மக்களுக்கு சிறு கடன் வழங்கும் திட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
தலித் கிறிஸ்துவர்களுக்கு அட்டவணை இனத்திற்குரிய சலுகைகளும், மீனவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடும் பெற்றுதரவில்லை.
மாநிலம் முழுதும் இரவு நேரத்தில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஊதியம், பணி பாதுகாப்பு இல்லை.
தி.மு.க., - காங்., மற்றும் தற்போதைய பா.ஜ., அரசு குரூப் - டி பணியிடங்களை முழுமையாக நீக்கிவிட்டு, ஒப்பந்த பணி முறையை கொண்டு வந்துவிட்டது.
இதனால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிடைத்து வந்த வேலை வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
பொறியியல் உள்ளிட்ட உயர் படிப்பு படித்த இளைஞர்கள் மாதம் 10 ஆயிரம் சம்பளத்தில், ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்கின்றனர்.
சட்டசபையில் அறிவித்த பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் வேலை இன்று வரை நிறைவேற்றவில்லை. குடும்ப தலைவிக்கு மாதம் ரூ. 1,000 வழங்கும் திட்டத்தில் தகுதியானவர்களுக்கு உதவி கிடைக்கவில்லை.
தேர்தலுக்காக பா.ஜ.வுக்கு டில்லியில் இருந்தும், காங்., கட்சிக்கு கர்நாடகாவில் இருந்தும் பணம் வந்துவிட்டது. உங்கள் ஓட்டு விற்பனைக்கு இல்லை என்பதை பா.ஜ., காங்., கட்சிகளுக்கு உணர்த்த வேண்டும்.
ராஜிவ் கொலை குற்றவாளிகள் விடுதலையான பின், சட்டசபை அலுவலகத்திற்கு அழைத்து சால்வை அணிவித்து முத்தம் கொடுத்த ஸ்டாலினுடன், ராகுல் கட்டி தழுவி நிற்பது மக்களை ஏமாற்றும் செயல். இதை ராஜிவ் ஆன்மா மன்னிக்காது' என்றார்.

