/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கிருஷ்ணா நகரில் வீடு வீடாக சென்று காங்., நிர்வாகிகள் ஓட்டு சேகரிப்பு

ADDED : ஏப் 10, 2024 03:41 AM

புதுச்சேரி : காமராஜர் நகர் தொகுதியில் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு ஆதரவாக காங்., நிர்வாகிகள் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தனர்.
'இண்டியா' கூட்டணி சார்பில், காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, காங்., ஒருங்கிணைப்பாளரும், காமராஜ் நகர் தொகுதி பொறுப்பாளருமான தேவதாஸ் தலைமையில் கிருஷ்ணா நகரில் வீடு வீடாக சென்று, காங் நிர்வாகிகள் ஓட்டு சேகரித்தனர்.
அந்த தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக இருந்த வைத்திலிங்கம் செய்த பணிகள், செயல்படுத்திய புதிய திட்டங்கள் குறித்து, பொதுமக்களிடம் விளக்கி பிரசாரம் செய்தனர். வைத்திலிங்கத்தின் பணிகளை பட்டியலிட்டு துண்டு பிரசுரங்களையும் வழங்கினர்.
காங்., சிறப்பு அழைப்பாளர் வினோத், நிர்வாகிகள் பார்த்திபன், யுவராஜ், சேகர் ,சிவா, முன்னாள் கவுன்சிலர் சேகர், ரவிச்சந்திரன், ஜெயலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.