ADDED : ஆக 02, 2026 07:32 PM
புதுச்சேரி: இடம் பிரச்னையில் கட்டடத்தை பொக்லைன் மூலம் இடித்த தம்பதி உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கதிர்காமம், சுப்ரமணியர் கோவில் தெருவை சேர்ந்தவர் வரதராசு, 54; எலக்டிரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மேனகா, மகள் கவுசிகா பெயரில் திலாஸ்பேட்டை, வழுதாவூர் சாலையில் உள்ள 3,096 சதுர அடி இடத்தை கடந்த 2006ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி குமாரசாமி மனைவி மங்களம் என்பவரிடம் இருந்து வாங்கினார்.
அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என, அதன் அருகே வசித்து பாலசுப்ரமணியம், அவரது மனைவி மகாலட்சுமி, சுபாஷ் ஆகியோர் வரதராசுவிடம் பிரச்னை செய்து வந்தர். நேற்று முன்தினம் பாலசுப்ரமணியன், மகாலட்சுமி, சுபாஷ் ஆகியோர் இணைந்து 2 பொக்லைன் இயந்திரம் மூலம் வரதராசு இடத்திற்குள் இருந்த ரூ. 6 லட்சம் மதிப்பிலான பழைய கட்டடத்தை இடித்து அகற்றினர்.
இதுகுறித்து வரதராசு அளித்த புகாரின் பேரில், பாலசுப்ரமணியன், மகாலட்சுமி உட்பட மூவர் மீது தன்வந்திரி நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
