ADDED : செப் 05, 2024 05:26 AM

திருக்கனுார்: காட்டேரிக்குப்பத்தில் மின்சாரம் தாக்கி மாடு இறந்தது.
காட்டேரிக்குப்பம் மருத்துவமனை வீதியைச் சேர்ந்தவர் கோவிந்தன்; விவசாய கூலி தொழிலாளி. இவர் 10 கறவை மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை கறவை மாடுகளை அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு கோவிந்தன் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார்.
பின்னர், மாலை 5:30 மணி அளவில் மாடுகளை மீண்டும் வீட்டிற்கு ஓட்டி வந்து கொண்டிருந்தார். அப்போது, விவசாய நிலத்தின் மத்தியில் அறுந்து கிடந்த மின் கம்பியில் சினை பிடித்த கறவை மாடு ஒன்று சிக்கி, மின்சாரம் தாக்கி கீழே விழுந்தது. இதைகண்ட மற்ற மாடுகள் அங்கி இருந்து ஓட்டம் பிடித்தன.
மின்சாரம் தாக்கிய மாடு சம்பவ இடத்திலேயே இறந்தது. தகவல் அறிந்த காட்டேரிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மின் இணைப்பை துண்டித்து, இறந்த மாட்டை அப்புறப்படுத்தினர். இது குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.