ADDED : ஜூலை 27, 2026 06:21 PM
புதுச்சேரி: வேல்ராம்பேட்டில் நடந்த மாநில அளவிலான கர்லிங் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது.
முதலியார்பேட்டை தொகுதி வேல்ராம்பேட் ஸ்கைலைன் டர்ப்ல் சார்பில் 3வது மாநில அளவிலான கர்லிங் போட்டி நடந்தது. இப்போட்டியில் புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய பிராந்தியங்களை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்று நடந்தது.
விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ.,வும், பா.ஜ., மாநில துணை தலைவருமான பாஸ்கர் பங்கேற்று, வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இதில், லயன்ஸ் கிளப் மாவட்ட தலைவர் பால்ராஜ், சங்க செயலாளர் வினோத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை சங்க கிளை செயலாளர் வசந்த், ஜெயஸ்ரீ, நித்திஷ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
