/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஊர்க்காவல்படை வீரர்களுக்கு தினசரி சம்பளம் உயர்வு
/
ஊர்க்காவல்படை வீரர்களுக்கு தினசரி சம்பளம் உயர்வு
ADDED : செப் 14, 2024 05:55 AM
புதுச்சேரி: புதுச்சேரியில், போலீசாருக்கு உதவும் வகையில், ஊர்காவல் படை வீரர்கள், அனைத்து போலீஸ் நிலையம், புறக்காவல் நிலையங்களிலும் டிரைவராகவும், அலுவலக பணி மற்றும் ரோந்து போலீசாருடன் சென்று சட்டம் ஒழுங்கு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சட்டம் ஒழுங்கு போலீசாருக்கு இணையாக பணியாற்றும் ஊர்க்காவல்படை வீரர்களுக்கு தினசரி ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ.1056 வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஊர்காவல் படை வீரர்களின் சம்பளத்தை 1056 ரூபாய் உயர்த்த முதல்வர் ரங்கசாமி,உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டனர்.
அதன்படி, தற்போது ஊர்காவல்படை வீரருக்கு தினசரி வழங்கப்படும் சம்பளம் ரூ.1056 இல் இருந்து ரூ. 1085 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கூடுதலாக 29 ரூபாய் ஏற்றப்பட்டுள்ளது.
இதற்கான ஆணையை கவர்னரின் உத்தரவின்படி உள்துறை செயலர் ஷிரன் பிறப்பித்துள்ளார். இந்த சம்பள உயர்வு கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக உள்துறை தெரிவித்துள்ளது.