/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நுாற்பாலை தொழிலாளி கார் மோதி பலி
/
நுாற்பாலை தொழிலாளி கார் மோதி பலி
ADDED : ஜூன் 13, 2024 08:18 AM
காரைக்கால்: காரைக்காலில் கார் மோதி காயமடைந்த நுாற்பாலை தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிழந்தார்.
காரைக்கால், திருநள்ளார் சேத்துார், கன்னிக்கோவில் தெருவை சேர்ந்தவர் மதிவாணன், 58; ஜெயபிரகாஷ் கூட்டுறவு நுாற்பாலையில் பணிபுரிந்தார்.
இவர் நேற்று முன்தினம் சேத்துார் கடை வீதியில் பைக்கில் நின்றுக்கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த கார் அவர் மீது மோதியது.
படுகாயமடைந்த மதிவாணன், அரசு மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து நகர போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்தனர்.
தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த ரெஜாக், 45, என்பவர் கார் ஒட்டிவரும் போது திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டு, கட்டுப்பாட்டை இழந்து மதிவாணன் மீது மோதியது தெரியவந்தது.