
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: கலை பண்பாட்டுத்துறை மற்றும் பாரதியார் பல்கலைக்கூடம் இணைந்து பதம் மற்றும் ஜாவளி என்ற தலைப்பில் இரண்டு நாட்கள் நடன பயிற்சி பட்டறை பல்கலைக்கூடத்தில் நடத்தின.
தேசிய சங்கீத நாடக அகாடமியின் விருதாளர் ஊர்மிளா தலைமை தாங்கினார். கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் கலியபெருமாள் முன்னிலை வகித்தார். பல்கலைக்கூட முதல்வர் அன்னபூர்ணா வரவேற்றார்.
நிகழ்ச்சியை, கலை பண்பாட்டுத்துறை செயலர் நெடுஞ்செழியன் துவக்கி வைத்தார்.
நடனத்துறை பேராசிரியர் விசித்ரா, நுண்கலைத்துறை தலைவர் பிரபாகரன் உட்பட பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

