/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வரதராஜ பெருமாள் கோவிலில் கவர்னர் சாமி தரிசனம்
/
வரதராஜ பெருமாள் கோவிலில் கவர்னர் சாமி தரிசனம்
ADDED : மே 19, 2024 03:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : வரதராஜ பெருமாள் கோவில் பிரமோற்சவ விழாவையொட்டி, கவர்னர் ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார்.
புதுச்சேரி, காந்தி வீதி வரதராஜ பெருமாள் கோவிலில் 38ம் ஆண்டு பிரமோற்சவ விழா கடந்த 14ம் தேதி துவங்கியது.
அதனை தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று பிரம்மோற்ச விழாவில் கவர்னர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக, கோவிலுக்கு வந்த கவர்னருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.கள் சிவசங்கரன், ராமலிங்கம், அசோக் பாபு மற்றும் கோவில் நிர்வாகக் குழுவினர் கலந்து கொண்டனர்.

