தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பல்கலை., முதுகலை டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

பல்கலை., முதுகலை டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

பல்கலை., முதுகலை டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

1


ADDED : ஜூன் 11, 2026 09:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 11, 2026 09:01 PM

1


1
Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பல்கலைக்கழக ஆன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு  நீட்டிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகப் பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 2026–27ம் கல்வியாண்டிற்கான முதுகலை மற்றும் முதுகலை டிப்ளமோ படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்காக வரும் 15ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

கியூட் பி.ஜி.,–2026 தேர்வில் தகுதி மதிப்பெண் பெற்று, முன்னதாக அறிவிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் ஆன்லைன் விண்ணப்ப செயல்முறையை நிறைவு செய்யாத தகுதியுள்ள மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, பல்கலைக்கழகத்தால் பயிற்றுவிக்கப்படும் பல்வேறு முதுகலை மற்றும் முதுகலை டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள், பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ சேர்க்கை போர்ட்டலான https://pondiunicuet.samarth.edu.in/pg/ என்ற இணையதளம் வழியாக வரும் 15ம் தேதி அல்லது அதற்கு முன்னரோ தங்களது ஆன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படும் படிப்புகள், தகுதி அளவுகோல்கள், சேர்க்கை அட்டவணை மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்த விரிவான தகவல்களை அறிய மாணவர்கள் பல்கலைக்கழக இணையதளம் மற்றும் சேர்க்கை போர்ட்டலை பார்வையிடலாம்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us