ADDED : ஆக 04, 2026 08:21 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: அரசு மருத்துவமனையில் டாக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு டாக்டர் விஷ்வஜா பணியில் இருந்தார். அப்போது மணிகண்டன் 36, என்பவர் கீழே விழுந்து தலையில் ரத்தக்காயத்துடன் மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு டாக்டர் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோது, மணிகண்டன் உடன் வந்த லுார்துசாமி என்பவர் டாக்டரிடம் விரைவாக சிகிச்சை அளிக்கக் கோரி, தகராறில் ஈடுபட்டு, கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
