பருவமழை துவங்குவதற்கு முன் வாய்க்கால் துார்வார தீர்மானம்
பருவமழை துவங்குவதற்கு முன் வாய்க்கால் துார்வார தீர்மானம்
ADDED : ஜூலை 02, 2026 06:40 PM
புதுச்சேரி: இந்திய கம்யூ., காமராஜ் நகர் தொகுதிக்குழு கூட்டம் இந்திரஜித் குப்தா படிப்பகத்தில் நடந்தது. துணைச் செயலாளர் தயாளன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சிவக்குமார், மாநிலக்குழு முடிவுகளை விளக்கினார். தொகுதிச் செயலாளர் செல்வம் பணிகள் மற்றும் சட்டசபை தேர்தல் நிலவரம் குறித்து பேசினார்.
பொருளாளர் மாதவ ராமன், தொகுதிக்குழு உறுப்பினர்கள் ஞானசங்கர், மோகன் தாஸ், சரவணன், பிரகாஷ், வேலு, கிளைச் செயலாளர்கள் சரவணன், சூரி, கோவிந்தன், சந்திரகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மத்திய, மாநில அரசை கண்டித்தும், உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வலியுறுத்தியும் ஆகஸ்ட் 6 முதல் 15ம் தேதி வரை நடக்கும் பிரசார பாதயாத்திரை நடத்த வேண்டும். செப்டம்பர் 1ம் தேதி டில்லியில் நடக்கும் போராட்டத்தில் தொகுதிக்குழு சார்பில் பங்கேற்க வேண்டும். பருவமழை துவங்குவதற்கு முன், அனைத்து கழிவுநீர் வாய்கால்களையும் துார்வாரி சுத்தப்படுத்த வேண்டும். உப்பனாறு வாய்க்கால் மேம்பாலம் அமைக்கும் பணியினை விரைந்து முடிக்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
