/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கருணை அடிப்படையில் வேலை கேட்டு ஆர்ப்பாட்டம்
/
கருணை அடிப்படையில் வேலை கேட்டு ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 11, 2024 06:44 AM

புதுச்சேரி, : கருணை அடிப்படையில் வேலை கேட்டு உள்ளாட்சி துறை எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி நகராட்சியில் பணியின்போது இறந்துபோன மற்றும் மருத்துவ ஓய்வு பெற்ற ஊழியர்களின் வாரிசுதாரர்கள் கருணை அடிப்படையில் வேலை கேட்டு 177 பேர் விண்ணப்பித்துள்ளனர். 20 ஆண்டுகளுக்கு மேலாக கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படவில்லை.
இதனை கண்டித்து புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் வாரிசுதாரர்கள் சங்கம் சார்பில், தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். உள்ளாட்சி துறை எதிரே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வாரிசுதாரர் சங்க செயலாளர் சத்தியன் தலைமை தாங்கினார். நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து செயலாளர் பிரபு முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சம்மேளன பொது செயலாளர் ராதாகிருஷ்ணன், செய்தி தொடர்பாளர் நமச்சிவாயம், நல சங்க ஆலோசகர்கள் கலியபெருமாள், வேளாங்கண்ணிதாசன் கண்டன உரையாற்றினர்.
சுகாதார துறை வாரிசுதாரரர் சங்க தலைவர் டேவிட், சங்க நிர்வாகிகள் முனுசாமி, வேளாங்கண்ணி உள்பட பலர் கலந்து கொண்டனர். அடுத்தக்கட்டமாக 17ம் தேதி தலைமை செயலகம் எதிரே தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.