/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உழவர் உதவியகத்தில் மரக்கன்றுகள் வழங்கல்
/
உழவர் உதவியகத்தில் மரக்கன்றுகள் வழங்கல்
ADDED : செப் 15, 2024 07:15 AM

திருபுவனை: வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, வேளாண் தொழில் நுட்ப மேலாண்மை முகமை இணைந்து நடத்திய மரக்கன்றுகள் வழங்கும் முகாம், மதகடிப்பட்டு உழவர் உதவியக்ததில் நடந்தது.
வேளாண் அலுவலர் நடராஜன் வரவேற்றார். வேளாண் இயக்குனர் வசந்தகுமார் தலைமை தாங்கி, மரக்கன்றுகளை நட்டு, விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கினார். கூடுதல் இயக்குனர் ஜாகீர் உசேன் சிறப்புரையாற்றினார்.
மணக்குள வினாயகர் வேளாண் கல்லுாரி பேராசிரியர் செந்தில்குமார், இணை இயக்குனர்கள் சிவசண்முகம், சிவபெருமான், சண்முகவேலு, துணை இயக்குனர்கள் கலைச்செல்வி, சாந்தி, அமர்ஜோதி, குமாரவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் மதகடிப்பட்டு மணக்குள வினாயகர் வேளாண் கல்லுாரி மற்றும் கோவை காருண்யா கல்லுாரி மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.
முகாமில் பங்கேற்ற விவசாயகளுக்கு வேங்கை, ஈட்டி, பலா, தேக்கு, கருமருது உள்ளிட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
துணை இயக்குனர் அமர் ஜோதி நன்றி கூறினார்.