/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெரியார் நகரில் போலீஸ் பூத் டி.ஜி.பி.,யிடம் தி.மு.க., கோரிக்கை
/
பெரியார் நகரில் போலீஸ் பூத் டி.ஜி.பி.,யிடம் தி.மு.க., கோரிக்கை
பெரியார் நகரில் போலீஸ் பூத் டி.ஜி.பி.,யிடம் தி.மு.க., கோரிக்கை
பெரியார் நகரில் போலீஸ் பூத் டி.ஜி.பி.,யிடம் தி.மு.க., கோரிக்கை
ADDED : செப் 04, 2024 07:50 AM

புதுச்சேரி : 'பெரியார் நகரில் போலீஸ் பூத் அமைத்து தர வேண்டும்' என, தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன் கோரிக்கை வைத்துள்ளார்.
அவர், டி.ஜி.பி., ஷாலினி சிங்கிடம், அளித்த கோரிக்கை மனு;
நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட பெரியார் நகர் மிகவும் பின்தங்கிய மக்கள் வசிக்கும் பகுதியாக உள்ளது. இப்பகுதியில் 14 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். ஆரம்பப் பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை இங்கு உள்ளது.இந்த பகுதியில் கஞ்சா நடமாட்டம் அதிகமாக உள்ளது. இப்பகுதி மாணவர்கள், இளைஞர்கள், கஞ்சா போதைக்கு அடிமையாகி சீரழிந்து வருகின்றனர். இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் எதிர் காலம் கருதியும், குற்ற சம்பவம் நடக்காமல் இருக்கவும், சட்டம் ஒழுங்கு சீராக இருக்கவும், தடை செய்யப்பட்ட கஞ்சா போன்ற போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்கவும் இந்த பகுதியில் போலீஸ் பூத் அமைத்து கண்காணித்தால் குற்றங்கள் குறையும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. நெல்லித்தோப்பு தொகுதி செயலாளர் நடராஜன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பரிமளம் ஆகியோர் உடனிருந்தனர்.