ADDED : ஆக 07, 2026 06:01 PM
புதுச்சேரி: புதுச்சேரி மாநில தி.மு.க., சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி 8ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
புதுச்சேரி சுதேசி மில் அருகே மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் தி.மு.க.,வினர் அமைதி ஊர்வலம் சென்றனர். அங்கிருந்து துவங்கிய ஊர்வலம் அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது. அங்கு அலங்கரித்து வைத்திருந்த கருணாநிதி உருவப்படத்திற்கு மாநில அமைப்பாளர் சிவா மலர்துாவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில், அவை தலைவர் சிவக்குமார், மாநில துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி, பொருளாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., இளைஞரணி அமைப்பாளர் சம்பத், எம்.எல்.ஏ.,க்கள் கார்த்திகேயன், ரமேஷ், விக்னேஷ், மாநில துணை அமைப்பாளர் தைரியநாதன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மூர்த்தி, நந்தா சரவணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கோபால், தொகுதி செயலாளர்கள், அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
