எம்.ஜி.ஆர்., சிலை அமைப்பு குழு மாநில பேரவையாக மாற்றம்
எம்.ஜி.ஆர்., சிலை அமைப்பு குழு மாநில பேரவையாக மாற்றம்
ADDED : ஆக 07, 2026 06:01 PM
புதுச்சேரி: அரியாங்குப்பம் தொகுதி, காக்காயந்தோப்பில் எம்.ஜி.ஆர்., சிலை அமைப்பு குழுவின் கூட்டம் நடைபெற்றது.
தலைவர் மாசிலா குப்புசாமி தலைமை தாங்கினார். இதில், காக்காயந்தோப்பு எம்.ஜி.ஆர்., சிலை அமைப்பு குழுவை பெயர் மாற்றி புதுவை மாநில எம்.ஜி.ஆர்., பேரவை அமைப்பாக செயல்படுவது என, முடிவு செய்யப்பட்டது. இதில், மாநில பேரவை தலைவராக மாசிலா குப்புசாமி தேர்வு செய்யப்பட்டார். துணை தலைவர்கள் ராமசந்திரன், மகாலிங்கம், செயலாளர் கோவிந்தன், துணை செயலாளர்கள் கதிர்வேல், ஜெயச்சந்திரன், பொருளாளர் வேல்முருகன், நிரந்தர நிதி காப்பாளர்கள் சந்தோஷ், சஞ்சை உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், வீராம்பட்டினம் வீதி நுழைவு வாயிலிலிருந்து ஆர்.கே., நகர், செட்டிகுளம், காக்காயந்தோப்பு, பவானி நகர், இங்குள்ள தெப்பகுளம் வரை யு வடிவ கழிவுநீர் வாய்க்கால் மற்றும் தார் சாலை போடும் பணிகள் நடக்கிறது. இந்த கட்டுமான பணிகளை தரமாக செய்து முடித்திட வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
