தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விநாயகா மிஷன் அலைடு ெஹல்த் சயின்ஸ் கல்லுாரி பட்டமளிப்பு விழா

விநாயகா மிஷன் அலைடு ெஹல்த் சயின்ஸ் கல்லுாரி பட்டமளிப்பு விழா

விநாயகா மிஷன் அலைடு ெஹல்த் சயின்ஸ் கல்லுாரி பட்டமளிப்பு விழா


ADDED : ஆக 07, 2026 05:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 07, 2026 05:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி விநாயகா மிஷன் வளாகத்தில் உள்ள அலைடு ெஹல்த் சயின்ஸ் கல்லுாரியில் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

டீன் செந்தில்குமார் தலைமை தாங்கி, சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். புதுச்சேரி பிரிவு கல்லுாரி இயக்குநர் ஆண்ட்ரூ ஜான் வரவேற்றார். குடும்பம் மற்றும் சுகாதார நலத்துறை இயக்குநர் செவ்வேள் சிறப்புரையாற்றினார். விழுப்புரம் மாவட்ட சுகாதார நலத்துறை இணை இயக்குநர் சாந்தகுமாரி, மாணவர்களை ஊக்கப்படுத்தி பேசினார். பல்கலைக்கழகம் மாணவர் நல இயக்குனர் சண்முகசுந்தரம் வாழ்த்துரை வழங்கினார்.

விழாவில், 213 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் மற்றும் துறை வாரியாக பல்கலைக்கழக அளவில் 5 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கல பதக்கம் பெற்றுள்ளனர். முடிவில், பட்டதாரி மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாக அதிகாரி சந்துரு மற்றும் பேராசிரியர்கள் செய்தனர். ஒளியியல் பிரிவு ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us