ADDED : ஆக 20, 2024 05:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டா மருத்துவமனையில், பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து, நாடு முழுவதம் டாக்டர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனை உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மருத்துவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி ஜிப்மர் டாக்டர்கள், கதிர்காமம் மருத்துவமனை டாக்டர்கள் நேற்று மாலை கடற்கரை சாலையில் இருந்து கண்டன பேரணி நடத்தினர். பழைய கோர்ட் வளாகம் வரை நடந்த பேரணியை தொடர்ந்து, அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.