ADDED : ஜூன் 28, 2026 05:00 PM
புதுச்சேரி: காட்டேரிக்குப்பம் போலீஸ் சார்பில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினத்தை முன்னிட்டு போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
காட்டேரிக்குப்பம் தனியார் பள்ளியில் நடந்த பேரணியை சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் துவக்கி வைத்து, போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதை பழக்கத்திற்கு அடிமையாகமால் இருக்க, தங்களுக்குள் இருக்கும் விளையாட்டு திறனை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்கள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் தண்டனை விவரங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, போலீசார், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பேரணியாக, காட்டேரிக்குப்பம் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பொது மக்களுக்கு போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
