/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏக்லவ்யா பள்ளி சார்பில் கடற்கரை சாலையில் யோகா சாதனை நிகழ்ச்சி
/
ஏக்லவ்யா பள்ளி சார்பில் கடற்கரை சாலையில் யோகா சாதனை நிகழ்ச்சி
ஏக்லவ்யா பள்ளி சார்பில் கடற்கரை சாலையில் யோகா சாதனை நிகழ்ச்சி
ஏக்லவ்யா பள்ளி சார்பில் கடற்கரை சாலையில் யோகா சாதனை நிகழ்ச்சி
ADDED : ஜூன் 25, 2024 06:31 AM

புதுச்சேரி : உலக யோகா தினத்தையொட்டி, ஆச்சாரியா கல்வி குழுமத்தைச் சேர்ந்த தேங்காய்த்திட்டு ஏக்லவ்யா சர்வதேச பள்ளியில், கலாம் உலக சாதனை நிறுவனம் சார்பில் யோகா நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் நடந்த நிகழ்ச்சியில், மகளிருக்கு உரிமை என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அதில், பள்ளி மாணவர்கள் கனசதுர வடிவ ரூபிக் கியூபை செய்து கொண்டே 50 வகையான ஆசனங்களையும், மற்றும் பிரமிடுகளை நிகழ்த்தி சாதனை செய்தனர். அதில் பள்ளி மாணவர்கள் பங்கேற்று யோகா ஆசனங்களை செய்தனர். அதன் மூலம், கலாம் உலக சாதனை பட்டியலில் மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில், ஆச்சாரியா கல்வி குழுமத்தின் தலைவர் அரவிந்தன், கலாம் உலக சாதனை குழுமத்தின் நிறுவன தலைவர் குமரவேல், அல்கிரி, தலைமை நீதிபதி பிரேம்குமார், ஆகியோர் பங்கேற்று, மாணவர்களுக்கு கலாம் உலக சாதனை சான்றிழ் மற்றும் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர். மேலும், ஏக்லவ்யா சர்வதேச பள்ளிக்கு, கலாம் உலக சாதனை நிறுவன தலைவர் நினைவு பரிசினை, பள்ளியின் நிர்வாக இயக்குநர்அரவிந்தன் வழங்கினார். யோகா ஆசிரியர் ரகுவிற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பள்ளி நிர்வாக முதல்வர் சரண்யா நன்றி தெரிவித்தார்.