சென்னை மியாட் மருத்துவமனையில் அவசரகால அருங்காட்சியகம் திறப்பு
சென்னை மியாட் மருத்துவமனையில் அவசரகால அருங்காட்சியகம் திறப்பு
ADDED : ஜூலை 15, 2026 08:52 PM

புதுச்சேரி: சென்னை மியாட் மருத்துமனையில் உயிர் காக்கும் தருணங்களின் உலகம் என்ற அவரசகால அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது.
சென்னை மணப்பாக்கம் மியாட் மருத்துவமனையில், மியாட்டின் உயிர் காக்கும் தருணங்களின் உலகம் என்ற பொருளில், அவசரகால அருங்காட்சியகம் நேற்று முன்தினம் துவக்கப்பட்டுள்ளது. கூடுதல் போக்குவரத்து போலீஸ் கமிஷனர் ஷாமூண்டேஸ்வரி திறந்து வைத்தார், மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் பிரித்வி மோகன்தாஸ் தலைமை தாங்கி பேசுகையில், அவசரகால சிகிச்சை என்பது, ஒரு நோயாளி மருத்துவனைக்கு வருவதற்கு முன்பே துவங்குகிறது.
பொது மக்கள் சரியான நேரத்தில் எடுக்கும் முடிவுகள் மற்றும் தயார்நிலைகள் உயிர்களை காக்கின்றன. இந்த அருங்காட்சியகத்தின் மூலம், ஒவ்வொரு பார்வையாளரும் சிறப்பாக தயாராகி, செயல்படகூடிய நிலையுடன் திரும்புவார்கள் என்றார். பிக்எப்எம் உடன் இணைந்து, அவசரகாலத்தில் உதவ முன் வந்தவர்களுக்கு நகரத்தின் தேவதைகள் விருது வழங்கப்பட்டது.
இந்த அருங்காட்சியகத்தில், மியாட் மருத்துவமனையின் அவரசகால மருத்துவ அமைப்பின் பரிணாம வளர்ச்சி மற்றும் ஒரு நோயாளி ஆம்புலன்சில் இருந்து, ஆய்வகம் வரை கொண்டு செல்வரை விளக்குகிறது.
பார்வையாளர்களுக்கு மனித உடலமைப்பு கொண்ட பொம்மை மூலம், நேரடி செயற்கை சுவாசம் மற்றும் நெஞ்சு அழுத்த செயல்விளக்கம் அளிக்கப்படும்.மேலும் அங்கு வரும் பார்வையாளர்களுக்கு அவசர காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற கையடக்க கையேடு வழங்கப்படும்.
இந்த அருங்காட்சியத்தை ,கடந்த 15ம் தேதி முதல் அடுத்த மாதம் 15ம் தேதி வரை பள்ளி கல்லுாரி மாணவர்கள் பார்வையிடுமாறு மருத்துவமனை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
