ADDED : ஜூலை 15, 2026 09:00 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலையில் அசுர வேகத்தில், பறந்து சென்ற காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி கடற்கரை சாலையில் கடந்த 11ம் நள்ளிரவு சிவப்பு நிற கார் ஒன்று அசுர வேகத்தில், சென்றது. இதனால், அங்கிருந்த பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அலறி அடித்து ஓடினர். இது குறித்து தகவல் அறிந்த கிழக்குப் பிரிவு போக்குவரத்து போலீசார் அங்கிருந்த சி.சி.டி.வி., கேமராவை ஆய்வு செய்தனர். அதில் அசுர வேகத்தில் சென்றது கேஏ.09.எம்சி.0727 என்ற கர்நாடக பதிவெண் கொண்ட சிவப்பு நிற வோல்ஸ்வேகன் கார் என்பது தெரியவந்தது.
இது குறித்து வழக்குப் பதிந்து போலீசார் விசாரிக்கையில், கார் பெங்களூரை சேர்ந்த மோகன்ராஜ் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், காரை பறிமுதல் செய்தனர்.
