ADDED : செப் 05, 2024 05:20 AM
புதுச்சேரி: ரயில் வரும் போது, கேட் பழுதானதால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி - விழுப்புரம் பாசஞ்சர் ரயில், புதுச்சேரியில் ரயில் நிலையத்தில் இருந்து காலை 8:05 மணிக்கு புறப்படுகிறது.
ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடத்திற்கு முன், முதலியார்பேட்டை ரயில்வே கேட் மூடப்படும்.
நேற்று காலை 8:00 மணிக்கு கேட் கீப்பர் கேட்டை மூடும்போது, திடீரென கேட் பழுதாகி செயல்படாமல் போனது.
ரயில் நிலையத்தில் இருந்து பாசஞ்சர் ரயில் புறப்பட்டது. பதறிபோன கேட் கீப்பர், போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் இருந்த போலீசாரை அழைத்து, ஏற்கனவே செயல்படாமல் இருந்த மற்றோரு கேட்டை, ரயில் வருவதற்குள்மூடினர்.
ரயில் சென்ற பிறகு கேட்டை, போலீசார் கையால் நகர்த்தி திறந்து விட்ட பிறகு வாகனங்கள் சென்றன. அதனை தொடர்ந்து, பழுதானகேட் சரி செய் யப்பட்டது. ரயில் வரும் போது, கேட் பழுதானதால் பரபரப்பு நிலவியது.