/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நோணாங்குப்பம் ஆற்றில் ஆக்கிரமிப்பு; விசாரணை நடத்த அ.தி.மு.க., வலியுறுத்தல்

ADDED : செப் 02, 2024 01:14 AM
புதுச்சேரி, : நோணாங்குப்பம் ஆறு ஆக்கிரமிப்பு குறித்து விசாரிக்க கவர்னர் உயர்மட்ட குழு அமைக்க வேண்டும் என அ.தி.மு.க., வலியுறுத்தி உள்ளது.
அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் கூறியதாவது;
மின் கட்டண உயர்வு அவசியம் என்றால் அதற்கான காரணத்தை துறை அமைச்சர் மக்களிடம் விளக்க வேண்டும்.
கடற்கரை மேலாண்மை விதிகளின்படி, கடற்கரையில் இருந்து 500 மீட்டர் வரை கட்டடம் கட்ட கூடாது. ஆனால், புதுச்சேரியில் தனியார் ஓட்டல்கள், ரெசார்ட்டுகள் மீறி கட்டி வருகின்றனர்.
மக்களின் வரிப்பணத்தில் கடற்கரையில் கடைகளை கட்டி அழகுப்படுத்தி, குறைந்த விலைக்கு தனியாரிடம் டெண்டர் விடுகின்றனர்.
நேணாங்குப்பம் கடற்கரை தனியார் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆற்றங்கரை நீரோட்ட பகுதியில் மண் கொட்டி ஆக்கிரமித்துள்ளனர்.
ஆற்றின் கரையோரத்தில் 1 ஏக்கர் நிலம் வாங்கி, 8 ஏக்கரை ஆக்கிரமிக்கின்றனர்.
ஆதாரத்துடன் அரசிடம் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கவர்னர் வெறும் பார்வையாளராக இன்றி, ஆக்கிரமிப்பு தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகள் மூலம் விசாரித்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
இது தொடர்பான ஆதாரங்களை கவர்னரிடம் சமர்ப்பிப்போம் என கூறினார்.