/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுகாதார சம்மேளனத்தின் நிர்வாகிகள் செவிலியர் ஆலோசகருடன் சந்திப்பு
/
சுகாதார சம்மேளனத்தின் நிர்வாகிகள் செவிலியர் ஆலோசகருடன் சந்திப்பு
சுகாதார சம்மேளனத்தின் நிர்வாகிகள் செவிலியர் ஆலோசகருடன் சந்திப்பு
சுகாதார சம்மேளனத்தின் நிர்வாகிகள் செவிலியர் ஆலோசகருடன் சந்திப்பு
ADDED : மே 23, 2024 05:36 AM

புதுச்சேரி : செவிலியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக,மத்திய அரசின் சுகாதாரம்மற்றும் குடும்ப நல இயக்குனரகத்தின் செவிலிய ஆலோசகர் தீபிகா சிசில் காகாவை, சுகாதார ஊழியர்கள் சம்மேளனத்தின் நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.
பெங்களூருவில்தீபிகா சிசில் காகாவை,சுகாதார ஊழியர் சங்கங்களின் சம்மேளன கவுரவத் தலைவர் கீதா, புதுச்சேரி அரசு செவிலிய அதிகாரிகள் சங்கத் தலைவர் சுனீலாகுமாரி, பொதுச்செயலாளர் ஹரிதாஸ், பொருளாளர் பாக்கியவதி, அமைப்பு செயலாளர் கிறிஸ்டினா சங்கீதா, நிர்வாகிகள் ஜெரால்டு சியாமளா, சந்தானலட்சுமி, பொருளாளர் மணிவாணன், துணை பொதுச்செயலாளர் ஜெகநாதன் ஆகியோர்சந்தித்து பேசினர்.
அப்போது, மிசோரம், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ளது போல் செவிலியர்களுக்கான பதவிகளைமறுசீரமைப்புசெய்வது,செவிலியருக்கென தனி இயக்குனரகம் மற்றும் செவிலியர் கண்காணிப்பாளர் பதவிகளை உருவாக்குவதுகுறித்து கோரிக்கை வைக்கப்பட்டது.
கிளினிக்கல், கல்வி, பொது சுகாதாரம், தொடர் கல்வி மற்றும் பயிற்சி, ஆராய்ச்சி உள்ளிட்ட முக்கிய பணிகளை மேற்கொள்ள செவிலியர் துணை இயக்குனர்கள் பதவிகளை உருவாக்குவது, நர்சிங் அலவன்ஸ், புதிய சீருடை உருவாக்குவது, ஏ.என்.எம்., ஆஷா ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதுகுறித்தும்கலந்துரையாடினர்.
இந்த கோரிக்கைகள் குறித்தும், அவற்றை நிறைவேற்றுவதில் தற்போதைய நிலைகுறித்தும் விரிவான மனு அளிக்குமாறுதீபிகா சிசில் காகாகேட்டுக் கொண்டார்.மனு மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிப்பதாகவும் உறுதியளித்தார்.2004ம் ஆண்டு, ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்ட முதன்மை செவிலிய அதிகாரி மற்றும் துணை இயக்குநர் பதவிகளை திரும்ப பெற நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்து உள்ளார்.

