/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கத்தியுடன் திரிந்த பிரபல ரவுடி கைது
/
கத்தியுடன் திரிந்த பிரபல ரவுடி கைது
ADDED : மே 09, 2024 04:32 AM
வில்லியனுார் : கரிக்கலாம்பாக்கம் அருகே கத்தியுடன் திரிந்த ரவுடியை போலீசார் பிடித்து சிறையில் அடைத்தனர்.
கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலைய சப் -இன்ஸ்பெக்டர் இளமுருகன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு தனத்துமேடு கிராம பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது சாலையோரம் நின்றிந்த இளைஞர் ஒருவர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பியோடினார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது, அவர் ஒரு கத்தி மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதனை தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷ் கொண்டு சென்று தீவர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் கணுவாப்பேட்டை பகுதியை சேர்ந்த புண்ணியக்கோடி,30; என தெரியவந்தது.
இவர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிந்தது. போலீசார் கத்தியை பறிமுதல் செய்து, புண்ணியக்கோடி மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.