ADDED : ஜூன் 29, 2026 07:01 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரியில் மீனவர்களுக்கு நியமன எம்.எல்,ஏ., பதவி வழங்க வலியுறுத்தி உண்ணாவிரம் நேற்று துவங்கினார்.
புதுச்சேரியை சேர்ந்த செல்வநாதன் என்பவர், புதுச்சேரி சட்டசபையில், காலியாக உள்ள மூன்று நியமன எம்.எல்.ஏ.,க்கள் பதவிகளில், ஒன்றை மீனவ சமுதாயத்திற்கு வழங்க வலியுறுத்தி மூன்று நாள் உண்ணாவிதரத்ததை நேற்று துவக்கினார். புதுச்சேரி மறைமலையடிகள் சுதேசி மில் அருகில் இப்போராட்டம் நடந்தது. இதில், மீனவ சமுதாயத்திற்கு நியமன எம்.எல்.ஏ., பதவி வழங்குவதன் மூலம், மீனவர்களின் பிரச்னைகளை சட்டசபையில் எடுத்துரைத்தல், கல்வி வேலைவாய்ப்பு கோரிக்கைகளுக்கு குரல் கொடுத்தல், சமூக நீதியை உறுதி செய்ய முடியும் என வலியுறுத்தப்பட்டது.
