ADDED : ஜூலை 27, 2026 07:41 PM
புதுச்சேரி: புதுச்சேரி அனைத்து மாற்றுதிறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நேற்று நடந்தது.
சுதேசி மில் அருகே நடந்த கையெழுத்து இயக்கத்திற்கு சங்கத் தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மறுமலர்ச்சி மாற்றுதிறனாளிகள் சங்கத் தலைவர் மாயவன் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.
மாற்றுதிறனாளிகள் சங்கங்களின் தலைவர்கள் சுப்புராயன், பரமசிவம், சுசிலா, ஜான்பீட்டர் முன்னிலை வகித்தனர். இதில், வழக்கறிஞர் புரட்சிக்குமார்ரோடின், மாற்று திறனாளிகள் ஒருங்கிணைப்பாளர் சூடாமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கையெழுத்து இயக்கத்தில், கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் மாற்றுதிறனாளிகளுக்கு உயர்த்தப்பட்ட மாத உதவித்தொகை, இலவச அரசிக்கான தொகை மற்றும் பெட்ரோல் மானியத்தை அடுத்த மாதம் முதல் வழங்கப்பட வேண்டும். அரசு வேலை வாய்ப்பில் 4 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாக வழங்க வேண்டும். குடிசை மாற்று வாரிய, அடுக்குமாடி குடியிருப்புகள் மாற்று திறனாளிகளுக்கு வழங்கவேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
